இந்தியன் 2 கமலின் மாஸ் புகைப்படம் வெளியீடு

15 ஆவணி 2023 செவ்வாய் 15:11 | பார்வைகள் : 6759
கமல் நடிப்பில் இந்தியன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு 17 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.இதில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரகனி பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு இந்தியன் 2 வெளியாக இருக்கிறது.இந்நிலையில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 ஸ்பெஷல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தியன் முதல் பாகத்தில் கமல் நேதாஜி சந்திர போஸ் கெட்டப்பில் இருப்பது போன்று இந்த போஸ்டரிலும் காணப்படுகிறார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.