ஈரானிய தூதரகத்துக்குள் ஆயுதத்துடன் நுழைந்த நபரால் பரபரப்பு!!

19 சித்திரை 2024 வெள்ளி 14:04 | பார்வைகள் : 8022
பரிசில் உள்ள ஈரானிய தூதரகத்துக்குள் ஆயுதத்துடன் நுழைந்த ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 ஆம் வட்டாரத்தின் rue Fresnel வீதியில் உள்ள தூதரகத்துக்குள் நபர் ஒருவர் கிரைனைட் குண்டு வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 11 மணி அளவில் காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விரைந்து சென்றனர்.
தூதரகத்துக்குள் நுழைந்தவர் ஈரானை பூர்வீகமாக கொண்ட பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி குறித்த நபரைக் கைது செய்தனர். அவர் வைத்திருந்தது போலியான கிரைனைட் குண்டு என்பதும் தெரியவந்துள்ளது.