Paristamil Navigation Paristamil advert login

தளபதி 68 ல் தோனி நடிக்கிறாரா?

தளபதி 68 ல்  தோனி நடிக்கிறாரா?

15 ஆவணி 2023 செவ்வாய் 15:20 | பார்வைகள் : 2597


விஜயின் தளபதி 68 படத்தில் மகேந்திர சிங் தோனி நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே தளபதி 68 படத்திற்கு CSK என்ற தலைப்பு வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபு ஏற்கனவே சென்னை 600028 பாகம் 1 மற்றும் 2 ஆகிய படங்களை கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் இயக்கியிருந்தார்.அதனால் தளபதி 68 படத்தில் கிரிக்கெட் வீரர் தல தோனி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ஹரிஷ் கல்யாணி எல் ஜி எம் திரைப்படத்தை எம் எஸ் தோனி தயாரித்திருந்தார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எம் எஸ் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி, நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் தோனி நடிப்பது சம்பந்தமாக பரிசீலிப்பார் என்று பேசியிருந்தார்.அதனால் நடிகர் தோனி இனிவரும் காலங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்