இஸ்ரேல்-லெபனான் மோதலை தடுப்பதற்கு தேவையான அனைத்தையும் எதிர்கொள்வேன்! - ஜனாதிபதி மக்ரோன்!
19 சித்திரை 2024 வெள்ளி 21:53 | பார்வைகள் : 3770
’இஸ்ரேல்-லெபனான் நாடுகளுக்கிடையே மோதலை தடுப்பதற்காக அனைத்தையும் நான் எதிர்கொள்வேன்!’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இன்று ஏப்ரல் 19 வெள்ளிக்கிக்கிழமை லெபனானின் பிரதமர் நஜிப் மிகதி பரிசுக்கு வருகை தந்தார். அவருடன் அந்நாட்டு இராணுவ தளபதியும் உடன் வருகை தந்திருந்தார். அவர்களை வரவேற்று எலிசே மாளிகையில் வைத்து உரையாடிய ஜனாதிபதி மக்ரோன், அதன் பின்னர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.
“"லெபனான் ஆயுதப் படைகளுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கத் தீர்மானித்துள்ளேன்!” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலையில் இருந்து லெபனானை பாதுகாக்கவும், அதன் ஸ்திரதன்மையை உறுதிசெய்யவும் பிரான்ஸ் செயற்படும்!’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.