1,000 விசாக்கள் வழங்குவதாக உறுதிமொழி அளித்த கனடாவின் தற்போதை நிலை

20 சித்திரை 2024 சனி 11:30 | பார்வைகள் : 6054
கனடாவுக்கு தப்பி வருவதற்குள் காசாவிலிருக்கும் தங்கள் உறவினர்கள் உயிரிழந்துவிடக்கூடும் என கனடாவில் வாழும் பாலஸ்தீன கனேடியர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தில் வசிக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு 1,000 தற்காலிக குடியிருப்பு விசாக்கள் வழங்குவதாக கனடா பெடரல் அரசு ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்கள் ஆனபின்பும், இதுவரை பாலஸ்தீனத்திலிருந்து ஒரு கனேடியரின் உறவினர் கூட கனடாவுக்கு அழைத்துவரப்படவில்லை என்கிறார்கள் கனடாவில் வாழும் பாலஸ்தீன கனேடியர்கள்.
சோகம் என்னவென்றால், அந்த திட்டத்தின் கீழ் கனடா வர விண்ணப்பித்திருந்த சிலர் உயிரிழந்துவிட்டார்கள்.
சிலர் எப்படி உயிரிழந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், சிலர் தாக்குதலில் உயிரிழக்க, உயிரிழந்தவர்களின் பிள்ளைகள், பயத்துடன், தனிமையில், கனடாவிலிருந்து பதில் வருமா என காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1