Adult இணையதளங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட அதிரடி

20 சித்திரை 2024 சனி 11:54 | பார்வைகள் : 6307
வயது வந்தோருக்கான இணையதளமான போர்ன்ஹப், எக்ஸ்வீடியோஸ், ஸ்ட்ரிப்சாட் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய ஐரோப்பிய ஒன்றிய (European Union) ஓன்லைன் உள்ளடக்க விதிமுறைகளுக்கு இணங்க, வயது வந்தோருக்கான உள்ளடக்க நிறுவனங்களான PornHub, StripChat மற்றும் XVideos ஆகியவை இடர் மதிப்பீட்டு அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் சேவைகளுடன் தொடர்புடைய முறையான அபாயங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் வெள்ளிக்கிழமை கூறியது.
கடந்த டிசம்பரில் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் (DSA) கீழ் மூன்று நிறுவனங்கள் மிகப்பெரிய ஆன்லைன் தளங்களாக நியமிக்கப்பட்டன.
சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அகற்ற இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த DSA விதிகள் ஏப்ரல் 21 முதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில், PornHub, StripChat மற்றும் Xvideos ஏப்ரல் 23-ஆம் திகதிக்குள் DSA விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று EU கூறியுள்ளது.
DSA விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால், இந்த நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய வருடாந்திர வருவாயில் 6 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.