எட்டாவது தளத்தில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுமி பலி!

20 சித்திரை 2024 சனி 13:39 | பார்வைகள் : 13450
இரண்டு வயது சிறுமி ஒருவர் எட்டாவது தளத்தில் இருந்து விழுந்து பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை Toulouse (Haute-Garonne) நகரில் இடம்பெற்றுள்ளது.
மாலை 7.30 மணி அளவில் மருத்துவக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கபப்ட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். de Bellefontaine அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் பெற்றோர்களுடன் வசிக்கும் இரண்டு வயது சிறுமி ஜன்னல் வழியாக விழுந்து பலியாகியுள்ளார்.
மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தபோதே சிறுமி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1