Paristamil Navigation Paristamil advert login

சீஸ் மசாலா பூரி

சீஸ் மசாலா பூரி

16 ஆவணி 2023 புதன் 04:38 | பார்வைகள் : 4009


வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் எதை செய்து ஆனால் வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும்.ஆகையால் இன்று ஒரு உணவை ஒரு புது விதமாக செய்து பார்க்க போகிறோம். இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஆம் இன்று பூரியை புதுவிதமான முறையில் மசாலா பொருட்களை சேர்த்து அதன் பின்பு பூரி செய்யப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
ரவை - 2 ஸ்பூன்
சீஸ் - 1 கப் (துருவியது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது நெய் ஊற்றி மீண்டும் நன்றாக பிசைந்து 1/2 மணி நேரம் வரை அப்படியே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம்,பச்சை மிளகாய் ,மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சீஸை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பௌலில் அரிந்து வைத்துள்ள வெங்காயம்,மல்லித்தழை,சீஸ் மற்றும் மல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இப்போது மாவினை சிறிய அளவில் எடுத்துக் கொண்டு பூரி போன்று தேய்த்து அதன் நடுவே இந்த சீஸ் கலவி சிறிது வைத்து அதனை மடித்து விட்டு மீண்டும் பூரி போன்று பக்குவமாய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

இதே போன்று அனைத்து மாவினையும் தேய்த்துக் மாவை எடுத்து உருட்டி, அதை பூரி அளவிற்கு தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும். பின்பு இதே போன்று அனைத்து மாவையும் சின்ன சின்னதாக உருட்டி, சீஸ் கலவையை வைத்து பூரிஅளவிற்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர் அதில் மசாலா பூரியை ஒவ்வொன்றாக போட்டு இரு பக்கமும் பொரித்து எடுத்து எண்ணெய் இல்லாமல் வடிகட்டினால் சீஸ் மசாலா பூரி ரெடி!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்