அடம் பிடிக்கும் குழந்தையை மாற்றுவது எப்படி?
21 சித்திரை 2024 ஞாயிறு 09:42 | பார்வைகள் : 1642
குழந்தை வளர்ப்பு என்பது சவாலான விஷயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை சிறந்த முறையில் கவனித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள், சில சமயங்களில் கரிசனையும், அதீத பாசமும் குழந்தைகளை பேராசை கொண்டவர்களாகவும் தாங்கள் நினைத்ததை சாதிக்கும் குணம் கொண்டவராகவும் ஆக்கக்கூடும்.
இதனால் உங்கள் குழந்தை தேவையில்லாத விஷயங்களைக் கேட்கக்கூடும். மேலும் குழந்தை எது கேட்டாலும் எந்த மறுப்பும் தெரிவிக்காமலும் உடனே வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். எனவே குழந்தைகள் எது வேண்டுமானாலும் அடம்பித்து கேட்க கற்றுக் கொள்கின்றனர்.
எனவே தங்கள் குழந்தையின் நடத்தையை எப்போது பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். குழந்தையின் நடத்தையை மாற்ற உதவும் சில அடிப்படை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தொடர்பு என்பது உறவின் திறவுகோல். உங்கள் குழந்தைகளை நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பதை விட அவர்களுடன் அமர்ந்து பேசுவது எப்போதும் சிறந்தது. உங்கள் குழந்தையின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொலைகாட்சியில் வரும் விளம்பரங்கள்,அவர்களை தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும் என்று தூண்டுகின்றன.
இது தொடர்பாக உங்கள் குழந்தைகளுடன் பேசவும், நீண்ட காலத்திற்கு டிவி பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது, மாறாக அவர்கள் புத்தகங்களைப் படிப்பது அல்லது சில வேலைகளில் உங்களுக்கு உதவுவது போன்ற மாற்றாக ஏதாவது செய்யலாம்.
பணம் மற்றும் கடின உழைப்பு பற்றி உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள், அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் பொறுப்பு ஆனால் அவர்களின் தேவையற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது அல்ல. பெற்றோர்கள் அவர்களிடம் பணத்தைப் பற்றியும், வீட்டின் தேவைகளையும் உங்கள் குழந்தைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதைப் பற்றி பேச வேண்டும். இது பணத்தின் கருத்தையும், நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்ள உதவும்.
எப்பொழுதும் கேட்பதை விட மற்றவர்களுக்கு எதையாவது கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை பற்றி உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள். உண்மையாக தேவைப்படும் ஒருவருக்குக் கொடுப்பதன் மூலம் மகிழ்ச்சியைப் பெறுவது எப்படி என்பதைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும், இது அவர்களின் பேராசையை மட்டுமல்ல, அவர்களின் பிடிவாதத்தையும் மாற்ற உதவும்.