அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 14 பேர் பலி
21 சித்திரை 2024 ஞாயிறு 10:42 | பார்வைகள் : 2818
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன சுகாதாரத் துறை இதனைத் தெரிவித்துள்ளது.
ஆனால் பத்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
இதற்கிடையில், உயிரிழந்த 14 தியாகிகள் நூர் ஷம்ஸ் முகாமில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னர் இஸ்ரேலிய தாக்குதல்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஃபாவின் புறநகர் பகுதியான டெல் சுல்தானில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது வெள்ளிக்கிழமை இரவு வான்வழித் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய தாக்குதல்களால் இடம்பெயர்ந்த காஸா மக்களில் பாதி பேர் எகிப்துக்கு அருகில் உள்ள ரஃபாவில் பதுங்கி உள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் திகதி முதல் காசாவில் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 34,049 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 76,901 பேர் காயமடைந்துள்ளனர்.