Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் 99 வயது நீச்சல் வீராங்கனையின் சாதனை

கனடாவில் 99 வயது நீச்சல் வீராங்கனையின் சாதனை

22 சித்திரை 2024 திங்கள் 10:07 | பார்வைகள் : 6038


கனடாவில் 99 வயதான நீச்சல் வீராங்கனை சாதனை மேல் சாதனைகளை படைத்து வருகின்றார்.

பெட்டி புருசல் ஸ்வாம் என்ற மொன்றியல் நீச்சல் வீராங்கனை இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

800 மீற்றர் ப்ரீ ஸ்டைல் மாஸ்டர்ஸ் போட்டியில் ஸ்வாம் சாதனை படைத்துள்ளார்.

குறித்த தூரத்தை 26 நிமிடங்கள் 16 செக்கன்களில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

ஸ்வாம் தற்பொழுது பத்து உலக சாதனைகளை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வம் ஜூலை மாதம் ஸ்வாம் 100ம் பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

ஸ்வாமின் அர்ப்பணிப்பு ஏனைய அனைவருக்கும் முன்னுதாரணமாக காணப்படுகின்றது என சகல வீர வீராங்கனைகள் புகழாரம் சூட்டியுள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்