அமெரிக்கா பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து...
22 சித்திரை 2024 திங்கள் 10:14 | பார்வைகள் : 6641
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்ததில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் உட்பட ஏராளமானோர் வார விடுமுறைக்காக அங்கு சென்றிருந்தனர். அப்போது அதில் இருந்த ராட்டினம் ஒன்று திடீரென அறுந்து விழுந்ததில் 15 பேர் காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து அந்த பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது


























Bons Plans
Annuaire
Scan