இஸ்ரேலிய தாக்குதலில் மரணித்த தாய்... அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் பிரசவமான குழந்தை
22 சித்திரை 2024 திங்கள் 10:30 | பார்வைகள் : 2012
பாலஸ்தீன பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் மகளுடன் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்டதையடுத்து, அப்பெண்ணின் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.
காஸாவின் ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு வீடுகள் சேதமடைந்தது.
மேலும், சப்ரீன் அல்-சகானி எனும் 30 வார கர்ப்பிணி பெண்ணொருவர் படுகாயமடைந்தார். ஆனால், அவரும் 22 பேருடன் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
எனினும், அவரது வயிற்றில் குழந்தை உயிருடன் இருப்பதை மருத்துவர்கள் அறிந்தனர். உடனே அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு, மற்றொரு கைக்குழந்தையுடன் இன்குபேட்டரில் வைக்கப்பட்டது.
மொத்தம் 13 குழந்தைகளுடன் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஃபாவில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் கூறும்போது, காஸாவில் இராணுவ வளாகங்கள், ஏவுகணை நிலைகள் மற்றும் ஆயுதமேந்திய மக்கள் உட்பட பல்வேறு போராளிகளின் இலக்குகள் தாக்கப்பட்டதாக கூறினார்.