கனடாவை விட்டு வெளியேறிய சீன தூதர்
22 சித்திரை 2024 திங்கள் 10:48 | பார்வைகள் : 3771
கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு அரசு முறைப்யணமாக சென்றதைத் தொடர்ந்து, சீன தூதர் கனடாவை விட்டு வெளியேறியுள்ளார்.
Cong Peiwu என்பவர், 2019ஆம் ஆண்டு முதல் கனடாவுக்கான சீன தூதரான பணியாற்றிவந்த நிலையில், திடீரென கனடாவை விட்டு அவர் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில்தான் கனடாவின் துணை வெளியுறவு அமைச்சரான David Morrison சீனா சென்று சீனாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சரான Ma Zhaoxuவை சந்தித்தார். அப்படியிருக்கும் நிலையில், திடீரென எதற்காக கனடாவுக்கான சீன தூதர் கனடாவை விட்டு வெளியேறினார் என்பது தெரியவில்லை.
2018ஆம் ஆண்டு, கனேடிய பொலிசார் சீன தொலைக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை நிதி அலுவலரான Meng Wanzhouவைக் கைது செய்ய, சீனா, கனேடியர்களான Michael Spavor மற்றும் Michael Kovrig என்னும் இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
அந்த சம்பவங்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.