Paristamil Navigation Paristamil advert login

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் திடீர் மரணம்..

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் திடீர் மரணம்..

22 சித்திரை 2024 திங்கள் 12:19 | பார்வைகள் : 1508


கமல்ஹாசன் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் துரை காலமானார். அவருக்கு வயது 84.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் துரை. இவர் இயக்கிய ’பசி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதையும், இந்த படத்தில் நடித்த நடிகை ஷோபாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘அவளும் பெண்தானே’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான துரை அதன் பிறகு ரஜினிகாந்த் நடித்த ’சதுரங்கம்’ ’ஆயிரம் ஜென்மங்கள்’ கமல்ஹாசன் நடித்த ’நீயா’ ’மரியா டார்லிங்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். மேலும் மோகன் நடித்த ’கிளிஞ்சல்கள்’ சிவாஜி கணேசன் நடித்த ’துணை’ ஆகிய படங்களையும் இவர் இயக்கியுள்ளார். கடைசியாக அவர் கடந்த 1990 ஆம் ஆண்டு ’புதிய அத்தியாயம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் சிறந்த இயக்குனர் என்ற விருதை ‘ஒரு வீடு ஒரு உலகம்’ என்ற படத்திற்காக இயக்குனர் துரை பெற்றுள்ளார் என்பதும் பிலிம் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இயக்குனர் துரை திருவள்ளூரில் உள்ள அவரது வீட்டில் காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்