முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி..
22 சித்திரை 2024 திங்கள் 12:30 | பார்வைகள் : 9327
விஜய் தொலைக்காட்சியில் ’காபி வித் டிடி’ ‘ஜோடி நம்பர் ஒன்’ ’சூப்பர் சிங்கர்’ ’அச்சம் தவிர்’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி என்ற திவ்யதர்ஷினி என்பதும் சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. அது மட்டுமின்றி சில படங்களுக்கு அவர் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் அவர் பிஸியாக இருந்து வரும் நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.
திவ்யதர்ஷினி கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்த நிலையில் மூன்றே ஆண்டுகளில் அதாவது 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர்.
விவாகரத்திற்கான காரணத்தை அவர் இதுவரை தெரிவிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’அந்த சமயத்தில் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் விவாகரத்து முடிவை எடுத்தேன், அந்த முடிவு எனக்கு கஷ்டமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் தான் அந்த முடிவை எடுத்தேன் என்று கூறினார்.
நான் விவாகரத்து ஆனவர் என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் நான் தான் அதை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக நான் வேலைகளில் பிஸியானேன் என்றும் தெரிவித்தார். திவ்யதர்ஷினி விவாகரத்தாகி ஏழு வருடங்கள் ஆகிய போதிலும் இன்னும் சிங்கிள் ஆகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan