மலேசியாவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து
23 சித்திரை 2024 செவ்வாய் 09:05 | பார்வைகள் : 5754
மலேசியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ராயல் மலேசியன் கடற்படை (Royal Malaysian Navy) அணிவகுப்பு ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு பேராக் மாநிலத்தில் உள்ள லுமுட் கடற்படை தளத்தில் இன்று காலை 9.32 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நிகழ்ந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 10 பேரும் பணியாளர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய 10 பணியாளர்களுக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து உலங்கு வானூர்திகளில் ஒன்று, ஏழு பேருடன் ஓடு பாதையில் மோதியதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேருடன் அருகிலுள்ள நீச்சல் குளத்தில் மோதி விபத்துக்குள்ளதாக கூறப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan