உலகளவில் இவர்கள் மட்டுமே கடவுச்சீட்டு இல்லாமல் எங்கும் பயணிக்கலாம்..!
23 சித்திரை 2024 செவ்வாய் 10:08 | பார்வைகள் : 1956
சர்வதேச அளவில் மூன்று முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே கடவுசீட்டு இல்லாமல் பயணிக்கும் சலுகை உள்ளது என்பது குறித்து காண்போம்.
நாடு விட்டு நாடு செல்ல கடவுசீட்டு தேவை என்ற நடைமுறை 104 ஆண்டுகளாக உள்ளது. ஜனாதிபதி, பிரதமர், அரசு பிரமுகர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லவும் அவர்களுக்கு ராஜதந்திர கடவுசீட்டு (Passport) இருக்க வேண்டும்.
ஆனால், பிரித்தானிய மன்னர், ஜப்பானிய மன்னர் மற்றும் ராணி ஆகிய மூவருக்கு மட்டுமே உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்ல கடவுசீட்டு தேவையில்லை.
மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத்திடம் இருந்த இந்த சிறப்பு சலுகை, தற்போது மன்னராக பதவியேற்ற சார்லஸிடம் வந்துள்ளது.
அவர் முழு அரசு மரியாதையுடன் எங்கும் செல்ல அனுமதி உள்ளது என்ற செய்தியும், உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. எனினும், மன்னரின் மனைவிக்கு இந்த உரிமை இல்லை.
அவர்கள் வேறு நாட்டிற்கு செல்லும்போது தூதரக கடவுசீட்டை தங்களிடம் வைத்திருக்க வேண்டும். இதேபோல், அரச குடும்பத்தின் முக்கிய நபர்களுக்கும் ராஜதந்திர கடவுசீட்டுகளை வைத்திருக்க உரிமை உண்டு.
இந்த வகை கடவுசீட்டு வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு கவனம் மற்றும் மரியாதை வழங்கப்படுகிறது. அதாவது, பிரித்தானியாவில் அரச குடும்ப அரியணையில் அமர்ந்திருக்கும் நபருக்கே முதல் மரியாதையாக கடவுசீட்டு சலுகை உள்ளது.
ஜப்பானின் தற்போதைய பேரரசராக உள்ள நருஹிட்டோவுக்கு (Nahiruto) இந்த கடவுசீட்டு சலுகை உண்டு. அத்துடன் அவருடைய மனைவியான பேரரசி மசகோ ஒவாடாவும் (Masako Owada) இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
1971ஆம் ஆண்டு முதல் ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தனது பேரரசர் மற்றும் பேரரசிக்கு இந்த சிறப்பு ஏற்பாட்டை தொடங்கியது.
பிரித்தானியாவில் உள்ள செயலகம், ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் இந்த மூன்று பிரமுகர்கள் வெளிநாடு செல்லும் பட்சத்தில் திட்டம் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட நாட்டிற்கு முன்கூட்டியே அனுப்புகிறது.
உலகின் அனைத்து நாட்டு பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும்போது, அவர்கள் கடவுசீட்டுகளை வைத்திருக்க வேண்டும். அவர்களின் கடவுசீட்டுகள் தூதரக கடவுசீட்டுகளாக இருக்கும்.