Paristamil Navigation Paristamil advert login

'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்?

'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்?

23 சித்திரை 2024 செவ்வாய் 11:07 | பார்வைகள் : 4205


படத்திற்கான தலைப்பு அறிவிப்புகளை ஒரு போஸ்டரில் வெளியிட்டு வேலையை முடித்துவிடுவார்கள். ஆனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத் தலைப்பு அறிவிப்புக்கு ஒரு வீடியோவை வெளியிட்டு புது டிரெண்ட்டை உருவாக்கினார்.

2020 நவம்பரில் வெளியான 'விக்ரம்' பட தலைப்பு டீசர் கமல்ஹாசனின் நடிப்பாலும், உருவாக்கத்தால் அதிக வரவேற்பைப் பெற்றது. அந்த டீசர் இதுவரையிலும் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

அதற்கடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் கடந்த வருடம் வெளியானது. 'ப்ளடி ஸ்வீட்' புரோமோ என அழைக்கப்பட்ட அந்த டீசர் அதிரடியான வரவேற்பைப் பெற்றது. இதுவரையிலும் 79 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'விக்ரம்' தலைப்பு டீசரை விடவும் 'லியோ' டீசர் பிரமாதமாக இருந்தது என அதற்கான இரு மடங்கு பார்வைகளே சொல்லிவிடும்.

இப்போது லோகேஷ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் நேற்று வெளியானது. முந்தைய இரண்டு டீசர்களில் 'விக்ரம்'டீசரில் கமல்ஹாசன் 'ஆரம்பிக்கலாங்களா' என்ற ஒற்றை வார்த்தை வசனத்தைப் பேசினார். 'லியோ' டீசரிலும் கடைசியில் மட்டும் விஜய் 'ப்ளடி ஸ்வீட்' என்ற ஒற்றை வசனத்தைப் பேசினார். ஆனால், 'கூலி' டீசரில் ரஜினிகாந்த் நிறையவே வசனம் பேசியுள்ளார். மூன்று பட டீசர்களிலும் அனிருத்தின் இசை அதிரடியாகவே அமைந்துள்ளது.

இருந்தாலும் 'விக்ரம், லியோ' டீசர் அளவிற்கு 'கூலி' டீசர் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. 'விக்ரம்' டீசரை விட 'லியோ' டீசர் இரு மடங்கு பார்வைகளைப் பெற்றது. அது போல 'லியோ' டீசரை விட 'கூலி' டீசர் இரு மடங்கு பார்வைகளைப் பெறுமா, பொறுத்திருந்து பார்ப்போம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்