'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'?
23 சித்திரை 2024 செவ்வாய் 11:12 | பார்வைகள் : 9966
ஹரி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள 'ரத்னம்' படம் இந்த வாரம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ளது. இந்த வாரம் வெளியாக உள்ள நான்கு படங்களில் ஒரே பெரிய படம் இந்தப் படம்தான்.
இப்படத்திற்கு முன்பாக விஷால் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மார்க் ஆண்டனி' படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 100 கோடி வசூலையும் கடந்தது. அந்தப் படத்தில் விஷால் கதாநாயகன் என்றாலும் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று பேசப்பட்டது.
'மார்க் ஆண்டனி' படத்திற்கு முன்பாக விஷால் நடித்து வெளிவந்த 'லத்தி, வீரமே வாகை சூடும், எனிமி, சக்ரா, ஆக்ஷன், அயோக்யா, சண்டக்கோழி 2' ஆகிய ஏழு படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்தது. விஷாலின் தொடர் தோல்வியை மாற்றி எழுதிய படமாக 'மார்க் ஆண்டனி' வந்து வெற்றி பெற்றது.
ஹரி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான 'யானை, சாமி ஸ்கொயர், சிங்கம் 3, பூஜை' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகத் தோல்விப் படங்கள்தான். இருந்தாலும் 'மார்க் ஆண்டனி' வெற்றியை 'ரத்னம்' படத்திலும் விஷால் தக்க வைத்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எழுந்துள்ளது.

























Bons Plans
Annuaire
Scan