வரி அறவீடில் மோசடியை கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு!- 140,000 மோசடிகளை கண்டறிந்தது!
23 சித்திரை 2024 செவ்வாய் 11:21 | பார்வைகள் : 3475
அரசு தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை பல்வேறு வழிகளில் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக வரி அறவீடு செய்வதில் இடம்பெறும் மோசடிகளை கண்காணிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை இந்த AI வசதி கொண்டு உருவாக்கியுள்ளது.
வரி அறவீடு செய்வது தொடர்பில் மக்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு AI தானியங்கியாக செயற்படும் எனவும், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தார். இதனால் வரி ஏய்பில் மோசடிகள் எதுவும் இடம்பெறாமல் தடுக்க முடியும் எனவும் பிரதமர் கேப்ரியல் அத்தால் தெரிவித்தார்.
இவ் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை இந்த செயற்கை நுண்ணறிவு கருவி, 140,000 மோசடிகளை பட்டியலிட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு 40 மில்லியன் யூரோக்கள் எனவும் பிரதமர் கேப்ரியல் அத்தால் அறிவித்தார்.