டைட்டிலோடு கதையையும் காப்பியடித்தாரா லோகேஷ்...?
23 சித்திரை 2024 செவ்வாய் 11:19 | பார்வைகள் : 2020
நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசர் நேற்று மாலை வெளியானதில் இருந்து நெட்டிசன்கள் அக்கு வேர் ஆணிவேராக அதை டீகோட் செய்து வருகின்றனர். அதன்படி, இந்தப் படத்தின் கதையில் ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்துவிட்டார் எனவும் ஆதாரத்தோடு பதிவு செய்து வருகின்றனர்.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதே தலைப்பில் இதற்கு முன்பு சரத்குமார் நடித்திருக்கிறார். ‘உழைப்பாளி’ உள்ளிட்ட சில படங்களிலும் ரஜினி கூலி கதபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல, இந்த டைட்டில் டீசரில் அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என ரஜினி பேசிய வசனமும் அவர் இதற்கு முன்பு நடித்த படத்தின் பாடல் வரிகள்தான்.
இப்படி படத்தின் டைட்டில், வசனம் என எல்லாவற்றிலும் பழைய படங்களை மீண்டும் ரீ-கிரியேட் செய்திருந்தார் லோகேஷ். இப்போது இந்த டீசரில் இடம்பெற்றிருந்த காட்சிகளை டீகோட் செய்துள்ள நெட்டிசன்கள் இந்தக் கதையில் ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்து விட்டார் என லோகேஷை ரவுண்டு கட்டியுள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் 1981ல் வெளியான படம் ‘தீ’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கூலியாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அதன் பின்னர், தங்க கடத்தல் பிசினஸ் செய்து கேங்ஸ்டராக மாறுவார். அவரது தம்பி போலீஸ் அதிகாரியாக மாறும் நிலையில், அண்ணனை பிடிக்க முயற்சி செய்வார் என்பதுதான் கதை. இந்தப் படத்தில் ஹார்பரில் தங்கம் கடத்தும் போது ரஜினி சண்டை போடும் காட்சிகளைக் கொண்டுதான் லோகேஷ் இப்போதைய ‘கூலி’ டைட்டில் டீசரை உருவாக்கியுள்ளார் என்கின்றனர் ரசிகர்கள்.
’கூலி’ பேட்ஜ் அந்த படத்தில் ரஜினிகாந்தின் உயிரை ஒருமுறை காப்பாற்றும். அதே போல பேட்ஜ் அணிந்து கொண்டுதான் இதிலும் தன் உயிரை ரஜினி காப்பாற்றி இருக்கிறார். ஆக மொத்தத்தில், ’டைட்டில்- கதை என ‘கூலி’ படத்தில் எல்லாமே காப்பி தான். ரெட்ரோ ஸ்டைலில் ஸ்டண்ட், இசை, ஒளிப்பதிவு என இதை மட்டும் லோகேஷ் மாற்றியுள்ளார். கதை நாம் ஏற்கனவே பார்த்தது தான்’ என ரவுண்டு கட்டி வருகின்றனர் ரசிகர்கள்.