Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் நான்கு பிரதான வைத்தியசாலைகள் ஆபத்தில்

இலங்கையில் நான்கு பிரதான வைத்தியசாலைகள் ஆபத்தில்

16 ஆவணி 2023 புதன் 11:08 | பார்வைகள் : 6762


இலங்கையில் நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி, பதுளை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாரிய அபாய நிலை காணப்படுவதாக அதன் பொதுச் செயலாளர்  தர்மகீர்த்தி ஏப்பா குறிப்பிட்டுள்ளார்.

"நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் தற்போது கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக CT, MRI, PET போன்ற அதிகாரிகளின் ஓய்வு காரணமாக இந்த சோதனைகள் எதிர்காலத்தில் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, காலி, பதுளை, தேசிய வைத்தியசாலையிலும் CT, MRI, PET போன்ற பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது., அதிகாரிகளின் பணி ஓய்வு, மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வதால் எதிர்காலத்தில் கதிரியக்க சேவை கடும் நெருக்கடியை சந்திக்கும்.

இதற்கான விரைவு நடவடிக்கையாக, ஆட்சேர்ப்பு மற்றும் ஓய்வு வயதை, 60 இல் இருந்து 63 வயது வரை தற்காலிகம் ஏனும் அதிகரிக்குமாறு பரிந்துரைக்கிறோம்." என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்