கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ் - ஆதரவு வழங்கும் ஐ.நா
16 ஆவணி 2023 புதன் 12:57 | பார்வைகள் : 7744
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.
போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை தேடும் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இலங்கையில் 32 மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கொக்குத்தொடுவாய் மயானம் 33வது மனித புதைகுழி எனவும் ஐ.நா அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு பாரிய புதைகுழியையும் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகள் சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan