Essonne : வீதி விபத்தில் சிறுமி உட்பட ஐவர் காயம்!!
24 சித்திரை 2024 புதன் 06:42 | பார்வைகள் : 17371
நேற்று ஏப்ரல் 23 ஆம் திகதி RD 35 சாலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிறுமி உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர்.
Villejust அருகே இந்த விபத்து மாலை 5 மணி அளவில் இடம்பெற்றது. Montlhéry மற்றும் Les Ulis நகரங்களை இணைக்கும் குறித்த சாலையில் பயணித்த இரு மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்தைச் சந்தித்தது.
முதலாவது மகிழுந்தில் 33 வயது பெண்ணும் அவரது மூன்று வயது மகளும் இருந்துள்ளனர். இரண்டாவது மகிழுந்தில் அதே 33 வயதுடைய பெண் ஒருவரும்,7 மற்றும் 3 வயதுடைய இரு பிள்ளைகளும் பயணித்துள்ள நிலையில், இரு மகிழுந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டுள்ளன.
இதில் குறித்த ஐவரும் காயமடைந்துள்ளனர். இதில் முதலாவது மகிழுந்தில் பயணித்த 3 வயதுச் சிறுமி படுகாயமடைந்துள்ளார். அவர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இரு திசைகளிலும் வீதி போக்குவரத்து முடங்கியது. இரவு 8 மணிக்கு பின்னதாக போக்குவரத்து சீரடைந்தது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan