மெற்றோ நிலையங்களில் இளம் சிவப்பு நிறத்தில் மெற்றோ பதாகைகள்!
25 சித்திரை 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 4926
ஒலிம்பிக் போட்டிகளை கொண்டாடும் விதத்தில் பரிசில் உள்ள மெற்றோ நிலையங்களின் பெயர்ப்பலகைகளை இளம்சிவப்பு (rose) நிறத்தில் மாற்றப்பட்டு வருகிறது.
நேற்று ஏப்ரல் 24 ஆம் திகதியில் இருந்து இந்த பெயர்பலகைகளை காணக்கூடியதாக இருக்கிறது. இளம்சிவப்பு நிறமானது இவ்வருடத்தின் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ‘தீம்’ நிறமாகும். அதேவேளை, இந்த இளம்சிவப்பு நிற பதாகைகள் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் அரங்குகளுக்கு அருகே இருக்கும் நிலையங்களிலேயே மாற்றப்பட்டு வருகிறது. இதனால் போட்டிகள் இடம்பெறும் இடங்களை எளிதில் அடையாளம் காணமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 16 வழிச் சேவைகளைச் சேர்ந்த 1,100 மெற்றோ, RER மற்றும் ட்ராம் நிலையங்களில் இந்த இளம்சிவப்பு பதாதைகள் அமைக்கப்பட உள்ளதாக RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.