Paristamil Navigation Paristamil advert login

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்

25 சித்திரை 2024 வியாழன் 06:12 | பார்வைகள் : 13150


எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள்  எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல் இது நடைமுறைக்கு வரும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்