குழந்தைகள் மனதில் நம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
25 சித்திரை 2024 வியாழன் 06:35 | பார்வைகள் : 1416
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த முன்மாதிரியாகக் கருதப்படுகிறார்கள். சரியான பெற்றோராக இருக்க வேண்டும் என்பதை விட திறமையான பெற்றோராக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். குழந்தைகள் தவறு செய்வது இயல்பானது தான். ஆனால் அவர்களை மனரீதியாக வலிமையாகவும், பொறுப்பாகவும், சுதந்திரமாகவும், மற்றவர்களிடம் மரியாதையுடனும் வளர்ப்பது முக்கியம்.
ஒரு பெற்றோராக, சில சமயங்களில் நீங்களும் தவறு செய்யலாம் ஆனால் அது உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் கற்றலை பாதிக்காது. குழந்தைகள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை அறிந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மனதில் பாசிட்டிவிட்டி மற்றும் நம்பிக்கையை வளர்க்க உதவும் டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் விதிகளை உருவாக்குவது முக்கியம். இது குழந்தைகள் பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் உணர உதவுகிறது. குழந்தைகள் மற்றவர்களை நன்றாக நடத்தவும், வீட்டு வேலைகளில் பங்கேற்கவும், இரவில் வெகுநேரம் வெளியே இருக்க கூடாது என்பதை கற்றுக்கொள்ள உதவுகிறது. குழந்தை தவறு செய்தால், அவர்களுக்கு கடும் தண்டனை அல்லது அடிக்காமல் இருப்பது நல்லது, ஆனால் குழந்தை தவறு செய்தாலும் நீங்கள் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பது நல்லது.
விதிகளை அமல்படுத்துவது முக்கியம் ஆனால் விதிகள் மிகக் கடுமையாக இருக்கக்கூடாது. சில சூழ்நிலைகளில், குழந்தைகள் உங்களைப் பற்றி பயப்படாமல், உங்களிடமிருந்து விஷயங்களை மறைக்க முயற்சிக்கலாம். நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிகப்படியான கண்டிப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாமலும், சுயமரியாதை குறைவாகவும் உணர்வதாக கண்டறியப்பட்டது. எனவே வீட்டில் கடுமையான விதிகளை தளர்த்துவது நல்லது.
உங்கள் குழந்தைகளை வசதியாக உணர வைக்க பயனுள்ள தகவல் தொடர்பு மிகவும் முக்கியம். குழந்தைகள் மொழி, சமூகத் திறன்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள இது உதவும். இதன் மூலம் அவர்கள் ஒவ்வொரு விவரத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்குவதுடன். உங்களிடம் எந்த விஷயத்தையும் பயப்படாமல் சொல்வார்கள். பாதுகாப்பாக உணருவார்கள். வுகிறது.
குறைந்தது 20 நிமிடங்களாவது உங்கள் குழந்தையிடம் வாசிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டால், அவர்கள் புதிய சொற்கள் மற்றும் கருத்துகளைக் கற்றுக்கொள்வார்கள், அவர்கள் வளரும்போது உலகில் அதிக ஈடுபாடு கொள்ள இது உதவும்.
பெற்றோர் இருவரும் பிசியாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் உங்கள் குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும். இது அவர்களை மதிப்பதாக உணர வைப்பது முக்கியம். அன்றாட வேலைகளின் போது தொடர்புகொள்வதைத் தவிர, அவர்களுக்காக நேரம் ஒதுக்குவது முக்கியம், இதனால் தங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக குழந்தைகள் உணர்வார்கள். ஒன்றாக கேம் விளையாடுவது, நடைப்பயிற்சி செல்வது போன்ற செயல்கள் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர உதவும்.