பிரித்தானியாவின் ’ருவாண்டா’ திட்டம்! - பிரான்சில் அமோக வரவேற்பு!!

25 சித்திரை 2024 வியாழன் 08:58 | பார்வைகள் : 10556
சட்டவிரோத குடிவரவாளர்களை ருவாண்டா நாட்டுக்கு கடத்தும் சட்டம் ஒன்றை பிரித்தானியா கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்துக்கு பிரான்சில் அமோக வரவேற்பு எழுந்துள்ளது.
பிரித்தானியாவுக்குள் படகுகள் மூலமாகவோ, வாகனங்களில் பதுங்கி, மறைந்தோ நுழைபவர்களை, நாட்டில் இருந்து வெளியேற்றி ருவாண்டா நாட்டுக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டம் ஒன்றை பிரித்தானியா அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு பிரான்சில் 67% சதவீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
CNEWS, Europe 1 மற்றும் JDD ஆகிய ஊடகங்களுக்காக CSA நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. இன்று வெளியான கருத்துக்கணிப்பின் முடிவில், கிட்டத்தட்ட பத்தில் ஏழு பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
32% சதவீதமானவர் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும், 1% சதவீதமானவர்கள் கருத்து வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் கலே பகுதியில் வருடக்கணக்கான முகாம்களை அமைத்து தங்கியிருக்கும் அகதிகள் பலர், தொடர்ச்சியாக பிரித்தானியா நோக்கி படையெடுத்தவண்ணம் உள்ளனர். இதனால் கடந்த வருடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025