ஸ்ருதிஹாசன் காதல் மீண்டும் முடிவுக்கு வந்ததா ?

26 சித்திரை 2024 வெள்ளி 08:29 | பார்வைகள் : 7622
நடிகை ஸ்ருதிஹாசன் பிரபல நடிகர் கமல்ஹாசனின் வாரிசு என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும் தனது திறமையால் ஒரு முன்னணி கதாநாயகி இடத்தை பிடித்தார். தன் தந்தையை போலவே சுதந்திரமாக செயல்படும் குணம் கொண்ட ஸ்ருதிஹாசன் மும்பையைச் சேர்ந்த சாந்தனு ஹஸாரிகா என்பவருடன் கடந்த பல வருடங்களாக மும்பையில் லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். தங்களது காதல் பற்றி எந்த இடத்திலும் மறைக்காத ஸ்ருதிஹாசன் பொது இடங்களுக்கு காதலனுடன் வருவது மற்றும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்வது என வெளிப்படையாகவே இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரின் காதல் பிரேக் அப் ஆகி உள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காதலனுடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் ஸ்ருதிஹாசன் நீக்கிவிட்டார். அது மட்டுமல்ல வழக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும் பழக்கம் கொண்ட ஸ்ருதிஹாசன் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை.
மேலும் கடந்த மாதம் மும்பையை சேர்ந்த இணையதளம் ஒன்று ஸ்ருதிஹாசனும், சாந்தனுவும் திருமணம் செய்து கொண்டு விட்டார்கள் என ஒரு செய்தியை வெளியிட்ட போது, எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்படி செய்திருந்தால் அதை நான் ஏன் மறைக்க வேண்டும்.? அதனால் என்னை பற்றி தெரியாத மக்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று பதில் அளித்து இருந்தார். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது இவர்களது பல வருட காதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025