Paristamil Navigation Paristamil advert login

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றித் தெரியுமா?

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றித் தெரியுமா?

26 சித்திரை 2024 வெள்ளி 08:57 | பார்வைகள் : 1305


காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சாப்பிடும் பொழுது உங்களுடைய செரிமானம் தூண்டப்படுகிறது. செரிமான நொதிகள் மற்றும் வயிற்று அமிலம் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலமாக உணவுகள் நன்கு செரிக்கப்பட்டு ஊட்டச்சத்துக்கள் திறம்பட உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

நெய்யில் மிதமான சங்கிலி கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்ற காரணத்தால் அது எளிதில் ஜீரணமாகி உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. உங்களது நாளை நெய்யுடன் நீங்கள் ஆரம்பிக்கும் பொழுது அன்றைய நாள் முழுவதும் ஆற்றலோடு காணப்படுவீர்கள்.

நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடும் என்ற நம்பிக்கைக்கு மாறாக நெய்யானது உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது. இதில் இருக்கக்கூடிய ஆரோக்கியமான கொழுப்புகள் பசியை அடக்கி அதிகப்படியாக சாப்பிடுவதை குறைக்க உதவுகிறது. இதன் மூலமாக உங்கள் உடல் எடையை நீங்கள் கட்டுக்குள் வைக்கலாம்.

மூளையின் ஆரோக்கியத்திற்கு நெய்யில் காணப்படும் கொழுப்புகள் மிகவும் அவசியம். மூளை செல்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு அவசியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நெய்யில் நிறைந்துள்ளது. எனவே உங்களுடைய அறிவுத்திறன் செயல்பாடு மேம்படவும், மன தெளிவை பெறவும் உங்களது நாளை நெய்யுடன் துவங்குங்கள்.

நெய்யில் காணப்படும் பியூட்ரிக் அமிலம் என்ற குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலத்தில் வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. வெறும் வயிற்றில் நீங்கள் நெய் சாப்பிடும் பொழுது உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட்டு தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்கிறது.

நமது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் நச்சு நீக்க பண்புகள் நெய்யில் உள்ளதாக நம்பப்படுகிறது. எனவே இயற்கையான நச்சு நீக்க செயல்முறையை துவங்குவதற்கு காலை எழுந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள்.

ஹார்மோன் உற்பத்தி மற்றும் சீரமைப்புக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் அவசியம். நெய் சாப்பிட்டால் உங்களுடைய ஹார்மோன் அளவுகள் சமநிலையில் இருக்கும். இதனால் உங்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் அது தொடர்பான உடல்நலக் கோளாறுகள் ஏற்படாது.

நெய்யில் வைட்டமின்கள் A, D, E மற்றும் K அதுமட்டுமல்லாமல் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால் இது சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைப்பதற்கு உதவுகிறது.

சிறந்த சரும ஆரோக்கியத்தை பராமரித்து முன்கூட்டிய வயதான அறிகுறிகளை தடுக்க உங்களது நாளை நெய்யுடன் ஆரம்பியுங்கள். வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பு எரித்தலை ஊக்குவிக்கும் மிதமான சங்கிலி கொழுப்பு அமிலங்கள் நெய்யில் உள்ளது. எனவே உடல் எடை குறைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் காலை நெய் சாப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.

நெய்யில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. ஆகவே ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு காலை நெய் சாப்பிடுவது பயனளிக்கும்.

நெய்யானது செரிமான பாதையில் இயற்கை லூப்ரிகண்டாக செயல்படுகிறது. இது மலத்தை மென்மையாக்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. ஆகவே செரிமானம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு காலை நெய் சாப்பிடுவது ஒரு வரப் பிரசாதமாக அமைகிறது.

நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தை குறைத்து மூட்டுகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. காலை எழுந்ததும் முதல் வேலையாக நீங்கள் நெய் சாப்பிடும் பொழுது மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்