ஐரோப்பாவின் நன் மதிப்பைக் கெடுக்கிறது! - பிரித்தானியாவின் ருவாண்டா திட்டம் குறித்து மக்ரோன்!!
26 சித்திரை 2024 வெள்ளி 14:27 | பார்வைகள் : 3880
பிரித்தானியா கொண்டுவந்துள்ள 'ருவாண்டா' திட்டம் தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் விமர்சித்துள்ளார். குறித்த திட்டம் ஐரோப்பாவின் நன்மதிப்பை கெடுக்கிறதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை, ருவாண்டா நாட்டுக்கு அனுப்பும் திட்டம் ஒன்றை அந்நாடு கொண்டுவந்துள்ளது. இதனால் அங்கு சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள் நாட்டில் தஞ்சம் கோருவதில் சிரமம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் விமர்சித்துள்ளார். இது ஐரோப்பாவின் மதிப்பைக் கெடுக்கும் செயலாகும் எனவும், மூன்றாவது நாட்டை தேர்ந்தெடுங்கள் என்பது ஐரோப்பிய விழுமியங்களுக்கு புறம்பானதாகும் என அவர் விமர்சித்துள்ளார்.
அவர் இதனை தெரிவிக்கும் போது பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் குறித்தோ, ருவாண்டா திட்டம் குறித்தோ நேரடியாக குறிப்பிடவில்லை என்றபோதும், மறைமுகமாக அதனையே சாடியுள்ளதாக ஊடகங்கள் வெளிச்சமிட்டு காட்டியுள்ளன.