சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் - தப்பிக்க உதவிய வளர்ப்பு நாய்
26 சித்திரை 2024 வெள்ளி 14:30 | பார்வைகள் : 1067
ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கை விட்டல் (Guy Whittall) சிறுத்தை தாக்கியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கை விட்டல் பாரிய ஆபத்தில் இருந்து சிறிது நேரத்தில் தப்பினார்.
இந்த தாக்குதலில் அவருக்கு காயம் அடைந்தார்.
இதையடுத்து அவர் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்குள்ள வைத்தியர்கள் விட்டலுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
கை விட்டல் தனது செல்ல நாய் Chikara-வுடன் Humani பகுதியில் மலையேற்றத்திற்குச் சென்றார். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்தது.
எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்தார் விட்டல். அப்போது உரிமையாளரின் உயிரைக் காப்பாற்ற அவரது செல்ல நாய் சிக்கரா கடுமையாகப் போராடியது.
அப்போது அந்த நாயையும் சிறுத்தை தாக்கிவிட்டு ஓடியது. விடயம் தெரிந்தவுடன் விட்டல் ஹெலிகாப்டரில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், வைத்தியர்கள் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றினர்.
ஒரு காலத்தில் ஆல்ரவுண்டராக சிறந்து விளங்கிய கை விட்டல், மிடில் ஆர்டரில் ஜிம்பாப்வேயின் முதுகெலும்பாக இருந்தார்.
இந்த நேர்த்தியான பேட்ஸ்மேன் தனது வாழ்க்கையில் 46 டெஸ்ட் மற்றும் 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும், ஜிம்பாப்வே அணிக்கு நான்கு ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.
பரம்பரை பரம்பரையாக வரும் குடும்பத் தொழிலைக் கவனித்துக்கொள்ளும் நோக்கத்தில் மார்ச் 2003-இல் விளையாட்டிலிருந்து விடைபெற்றார்.