Paristamil Navigation Paristamil advert login

ஆட்சி அதிகாரம் மீது தான் ஆர்வமா : கெஜ்ரிவாலுக்கு டில்லி ஐகோர்ட் கண்டனம்

ஆட்சி அதிகாரம் மீது தான் ஆர்வமா : கெஜ்ரிவாலுக்கு டில்லி ஐகோர்ட் கண்டனம்

27 சித்திரை 2024 சனி 01:15 | பார்வைகள் : 1585


முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஆட்சி அதிகாரத்தில் தான் ஆர்வம். நாட்டு நலன் மீது இல்லை என மதுபான கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலுக்கு டில்லி ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுபான புதிய கொள்கை உருவாக்கியதில் ஆம்ஆத்மி கட்சி 100 கோடிக்கு மேல் முறைகேடு செய்த புகாரில் அமலாக்க துறை நடவடிக்கை எடுத்து முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியது. ஆஜராகாததால், கடந்த மார்ச் 21- ம் தேதி வீட்டில் வைத்தே அமலாக்கத்துறை கைது செய்து, திகார் சிறையில் அடைத்தது.

சிறையில் அடைக்கப்பட்டதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து , சிறையில் இருந்தவாறு கெஜ்ரிவால் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில் டில்லியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள் விநியோகிக்கப்படாமல் மாணவர்கள் அவதியுறுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது, டில்லி ஐகோர்ட் கூறியது, அரசு பள்ளி மாணவர்கள் பற்றிய கவலை டில்லிஆம் ஆத்மி அரசுக்கு சிறிதும் இல்லை. முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என கூறி கெஜ்ரிவால் கூறுவதன் மூலம் தனக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்.தேசிய நலன் மீது இல்லை என்பது தெரிகிறது. இன்னும் உங்களுக்கு எவ்வளவு அதிகாரம் வேண்டும். இவ்வாறு டில்லி ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்