உடலில் உள்ள செல்கள், இரத்தம், மூளை அனைத்தையும் பாதிக்கும் பச்சை குத்துதல். தோல் மருத்துவ பேராசிரியர் Jean-Claude Larrouy.

27 சித்திரை 2024 சனி 06:56 | பார்வைகள் : 7726
பச்சை குத்துதல் என்பது பண்டைய காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் இன்றைய பச்சை குத்தல் முறையானது மிகப்பெரும் பாதிப்புகளை உடலில் ஏற்படுத்துகிறது என தோல் மருத்துவ பேராசிரியர் Jean-Claude Larrouy தெரிவித்துள்ளார்.
பிரான்சில் 35 வயதிற்கு உட்பட்ட சுமார் 13 மில்லியன் பேர் தங்களின் உடலின் மறைவான இடத்திலோ, அல்லது வெளியே தெரியும் வகையிலோ பச்சை குத்தி கொண்டுள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது இவர்களில் பலர் பச்சை குத்திக் கொண்ட பின்னர் அதனை அழிப்பதற்கான பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பச்சை குத்திக் கொள்வதை விட அதனை அழிப்பதற்கான முயற்சி என்பது மிக செலவானதும் நீண்ட நேரம் ஆனதும் ஆகும். ஒருவர் தான் குத்திக்கொண்ட பச்சையை அழிப்பதென்றால் குறைந்தது மூன்று தடவைகள் மருத்துவரிடம் செல்ல வேண்டும் அத்தோடு அதன் அளவுக்கு ஏற்ப பணமும் அறவிடப்படும். சிறிய அளவான பச்சை குத்தும் இடத்தை அளிப்பதற்கு 100 யூரோக்கள் அறுவிடப்படுகிறது.
பச்சை குத்தும் போது ஏற்படும் பாதிப்பை விட அதனை அழிக்கும் போது அதிகபாதிப்புகள் உடலில் ஏற்படுகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. குத்தும்போதும் அழிக்கும் போதும் லேசர் அதிர்வுகள் தோலின் செல்களைப் பாதித்து இரத்தத்தை பாதிக்கிறது, இதனால் இதயத்தின் நரம்புகள் பாதிக்கப்படுவதோடு மூளையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தோல் மருத்துவ பேராசிரியர் Jean-Claude Larrouy தெரிவித்துள்ளார்..
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025