Paristamil Navigation Paristamil advert login

உலகின் பணக்கார நாடு எது தெரியுமா...?

உலகின் பணக்கார நாடு எது தெரியுமா...?

27 சித்திரை 2024 சனி 07:29 | பார்வைகள் : 1838


உலகின் பணக்கார நாடுகளைப் பற்றி பேசும்போது, ​​​​அமெரிக்கா அல்லது பிரிட்டன் போன்ற நாடுகளை நாம் முதலில் நினைவுபடுத்துகிறோம். 

ஆனால், ஒவ்வொருவரின் சராசரி வருமானமும் அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் சேர்ந்து நிர்ணயிக்கப்படும்போதுதான் அந்த நாடு பணக்கார நாடு என்று சொல்லப்படுகிறது.

அயர்லாந்து
2023-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில், பணக்கார நாடுகளின் பட்டியலில் அயர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்த சிறிய நாடு 2023ல் உலகின் பணக்கார நாடாக மாறி உள்ளது. குறைந்த மக்கள்தொகை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக இந்நாடு இந்த இடத்தை அடைந்துள்ளது. உலகின் பல முக்கியமான மற்றும் பிரபலமான நிறுவனங்கள் இந்த நாட்டில் முதலீடு செய்துள்ளன.

லக்சம்பர்க்
பணக்கார நாடுகளின் பட்டியல் 2023-ல் அடுத்த இடம் லக்சம்பர்க் ஆகும். இந்த நாடு மிகக் குறைந்த வித்தியாசத்தில் அயர்லாந்துக்கு பின்னால் உள்ளது. தனிநபர் வருமானத்தில் அயர்லாந்தை விட முன்னணியில் உள்ளது. இந்நாட்டில் ஆண்டு சராசரி தனிநபர் வருமானம் 73 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும். அதாவது இங்கு ஒரு நபர் ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் ஊதியம் பெறுகிறார்.

சிங்கப்பூர்
2023ல் பணக்கார நாடுகளின் பட்டியலில் அடுத்த இடம் சிங்கப்பூர். இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 59 லட்சத்து 81 ஆயிரம் ஆகும். நாடு பல ஆண்டுகளாக முதலீடு மற்றும் வர்த்தகத்தின் மையமாக திகழ்கிறது. இங்கு தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் 53 லட்சம் டாக்கா ஆகும். அதாவது, இங்கு ஒருவர் நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்.

கத்தார்
2023ஆம் ஆண்டு பணக்கார நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடான கத்தாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. மனித வளர்ச்சிக் குறியீட்டின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபை கத்தாரை மிகவும் வளர்ந்த பொருளாதாரம் என்று பெயரிட்டுள்ளது. இந்நாட்டில் வருடாந்த தனிநபர் வருமானம் 51 லட்சம் ரூபாக்கும் அதிகமாகும். பெரிய அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் இந்த நாட்டின் முக்கியமான வளங்கள் ஆகும்.

பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இல்லை. இந்தப் பட்டியலில் அமெரிக்கா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தற்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 80 ஆயிரம் டாலர்களை நெருங்குகிறது. இந்தப் பட்டியலில் சீனா, ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா
இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவுக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக மாறி வருகிறது. எனவே, இன்னும் சில வருடங்களில் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்