காவல் நிலையத் தடுப்பில் இருந்தவரைத் தாக்கிய காவற்துறை அதிகாரி - அதிர்ச்சி வழக்கு!!
27 சித்திரை 2024 சனி 09:58 | பார்வைகள் : 3291
வாகனம் செலுத்தும் போது அல்லது, வேறு எந்தக் குற்த்திற்காகவும் கைது செய்யப்படும் போது மது போதையில் இருந்தால், அவரது மதுபோதை தெளியும் வரை காவற்துறைத் தடுப்பில் வைத்து (cellule de dégrisement) மது போதை தெளிந்த பின்னர் விசாரணை செய்யும் முறை உண்டு.
இந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28ம் திகதி ஐம்பதுகளின் வயதுiடைய ஒரு நபர் Auch (Gers) காவல் நிலையத்தில் மது போதைத் தெளிவிற்காககத் தடுக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் உள்ளே புகுந்த காவற்துறை வீரன் ஒருவரால், கீழே போட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து தப்பிக்க முயல்கையில் மேலும் இரு காவற்துறை வீரர்கள் பிடித்து நிறுத்த, மீண்டும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
காயங்கள் அடைந்த நிலையில், மறு நாள் அந்தக் காவற்துறையினர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது.
இரண்டாண்டுகள் கழிந்தும் நீதித்துறை இந்த வழக்கைக் கிடப்பில் போட்டுள்ளது.
இதன் கண்காணிப்பு ஒளிப்பதிவின் காணொளிகளும் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனால் கோபமடைந்த, பாதிக்கப்பட்டவரின் சட்டத்தரணி ஊடகங்களின் உதவியை நாடி, தற்பொழுது இந்தக் காணொளி ஊடகங்களில் வெளியாகி உள்ள நிலையில், நீதித்துறை சிக்கலிற்கு உள்ளாகி உள்ளது.
காவற்துறையால் பாதிக்கப்பட்ட நபர், முன்னாள் இராணுவ வீரர் என்பதும் பல நாடுகளில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்பதும், தற்போது பெரும் மன உளைச்சலிற்கு ஆளாகிச் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும், குறிப்பிடத்தக்கது.