இலங்கையில் மனித முகத் தோற்றத்துக்கு ஒப்பாக பிறந்த ஆட்டுக்குட்டி
27 சித்திரை 2024 சனி 10:12 | பார்வைகள் : 14328
தெனியாய, விஹாரசேன, செல்வகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஆட்டுக்குட்டி ஒன்று மனித முகத் தோற்றத்திற்கு ஒப்பாக நேற்று (26) பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆட்டுக்குட்டியானது பிறந்து அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்வகந்த பிரதேசத்தைச் சேர்ந்த அசந்தகுமார் என்பவரின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு ஒன்றுக்கே இந்த ஆட்டுக் குட்டி பிறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

























Bons Plans
Annuaire
Scan