வாடகைத் தாய் முறைமையை ஆதரிக்கும் பிரெஞ்சு மக்கள்! - கருத்துக்கணிப்பு!!
27 சித்திரை 2024 சனி 10:47 | பார்வைகள் : 16532
வாடகைத் தாய் முறையை பெரும்பால பிரெஞ்சு மக்கள் ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கர்ப்பம் தரிக்க முடியாத பெண்கள், வாடகைத் தாய் முறையை பயன்படுத்தி பிள்ளை பெற்றெடுப்பது இப்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. ஒப்பந்த அடிப்பையில், இன்னொருவரின் பிள்ளையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இந்த வாடகைத் தாய் முறையாகும். பிரெஞ்சு மக்களில் பத்தில் ஆறு பேர் இந்த முறையை வரவேற்று ஆதரவுக் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன்படி, CNEWS, Europe 1 மற்றும் JDD ஊடகங்களுக்காக CSA நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் 59% சதவீதமான மக்கள் 'ஆம். நான் அதற்கு ஆதரவு அளிக்கிறேன்!' எனவும், 41% சதவீதமானவர்கள் 'இல்லை. இதற்கு நான் ஆதரவளிக்கவில்லை' எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பு ஏப்ரல் 25, 26 ஆம் திகதிகளில், 18 வயதுக்கு மேற்பட்ட 1,011 பேரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


























Bons Plans
Annuaire
Scan