Alfortville : பாடசாலை மாணவன் கைது!
27 பங்குனி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 9946
பாடசாலைக்கு போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த மாணவன் ஒருவர் கைது செய்யப்படுள்ளார். அவர் ‘17’ எனும் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு பாடசாலைக்கு குண்டு வைத்திருப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
Alfortville (Val-de-Marne) நகரில் உள்ள collège Léon Blum பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவரே மார்ச் 25 ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்று மாலை 4.40 மணி அளவில் குறித்த மாணவன் ’17’ எனும் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அவரது பாடசாலையின் வளாகத்தில் வெடிகுண்டு ஒன்றை புதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த தொலைபேசி அழைப்பு பெறப்பட்ட மாணவனின் இடத்தினை GPS மூலம் தெரிந்துகொண்ட காவல்துறையினர், மாணவனைக் கைது செய்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan