கமலுடன் மோதும் தனுஷ் ஜெயிக்கப்போவது யார்?

27 பங்குனி 2024 புதன் 07:53 | பார்வைகள் : 6919
கமல் படமான இந்தியன் 2 வுடன், தனுஷ் இயக்கி நடிக்கும் ரயான் படமும் மோத உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தான். இருவருமே பன்முகத்திறன் கொண்ட கலைஞர்கள். தனுஷின் 50வது படம் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதே போல ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கமான இந்தியன் படத்தின் 2ம் பாகம் முதல் பாகத்தின் வெற்றியைப் போலவோ, அதையும் தாண்டி பிரமாதமாகவோ அமையக்கூடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இரு படங்களுமே மே 16ல் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தக் லைப் படத்தோட சூட்டிங் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தொடங்க உள்ளது. துல்கர்சல்மானுக்குப் பதில் சிம்பு வருகிறார். கமல் 3 கெட்டப்பா 3 கேரக்டரா என்று தெரியவில்லை. ஜெயம்ரவிக்குப் பதிலாக அரவிந்தசாமி, லிவின்பாலி என இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அந்தப்படத்தோட எடிட்டிங் எல்லாம் பார்த்துவிட்டு படக்குழுவினரே மிரண்டு விட்டார்களாம்.
பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD படத்துக்கு நெட்பிளிக்ஸ்ல பெரிய வியாபாராம் ஆகப்போகுதுன்னு நினைச்சாங்களாம். ஆனா கமல் கெஸ்ட் ரோல் தான் பண்றேன்னு சொன்னதும் பிசினஸ் எல்லாம் மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் மிகப்பெரிய இழப்புகள் வரும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1