அவதானம் - நான்கு நாட்களுக்கு வங்கி பரிவர்த்தனைகள் தடைப்படுகிறது!
27 பங்குனி 2024 புதன் 08:59 | பார்வைகள் : 7149
வங்கி பரிவர்த்தனைகள் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்படட்டுள்ளது.
நாளை மார்ச் 28 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணி வரை இந்த வங்கி பரிவர்த்தனைகள் தடைப்பட உள்ளன. அன்ற திகதிகளில் ஊதியம் பெறுபவர்கள், குறித்த நாட்களில் அதை பெற முடியாது எனவும், 2 ஆம் திகதியின் பின்னரே அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிவர்த்தனை தடையானது ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் சாதாரண நிகழ்வாகும். கடந்த 20 ஆண்டுகளாக இது இடம்பெறுகிறது.
இந்த ஈஸ்ட்டர் விடுமுறையின் போது வங்கி பரிவர்த்தனைகள் இடம்பெறாது என்பது தொடர்பில் பொதுமக்கள் அவதானதுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.