சுவிஸ் சீஸ் தொழிற்சாலை உரிமையாளர் மீது கொலை வழக்கு
27 பங்குனி 2024 புதன் 10:12 | பார்வைகள் : 3906
சுவிஸ் தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட சீஸ் அல்லது பாலாடைக்கட்டியில் நோய்க்கிருமிகள் இருந்ததால், அதை சாப்பிட்ட ஏழு பேர் பலியானதைத் தொடர்ந்து, அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கும் இடையில், சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்திலுள்ள Steinerberg பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட சீஸை சாப்பிட்ட 34 பேருக்கு லிஸ்டீரியா என்னும் கிருமித்தொற்று ஏற்பட்டது.
அவர்களில் ஏழு பேர் உயிரிழந்தார்கள்.
அந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சீஸில் லிஸ்டீரியா நோய்க்கிருமி இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், கவனக்குறைவு காரணமாக ஏழு பேரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு suspended prison sentence என்னும் தண்டனை வழங்குமாறு அரசு தரப்பு சட்டத்தரணிகள் அரசை கோரிவருகிறார்கள். வழக்கு தொடர்கிறது.