சசிகுமார் இயக்கத்தில் நயன்தாரா?

27 பங்குனி 2024 புதன் 15:47 | பார்வைகள் : 9259
நடிகர் சசிகுமார் எப்போது இயக்குநராக கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ’சீக்கிரம் வருவேன்’ என பதில் சொல்லி இருப்பவர் நயன்தாராவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க அவரிடம் கதை சொல்லி இருக்கிறாராம்.
ஹீரோயினை மையப்படுத்திய கதைகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் நயன்தாரா. ’அறம்’ தவிர்த்து இவர் நடித்த ஹீரோயின் செண்ட்ரிக் படங்கள் எதுவும் பெரிதாக சோபிக்கவில்லை. இருந்தாலும் ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் நயன். மாதவன், சித்தார்த்துடன் இவர் நடித்திருக்கும் ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’ ஆகிய படங்களை அடுத்து புதிய படத்திற்காக கதை கேட்கத் தொடங்கியுள்ளார்.
இதில்தான் இயக்குநர் சசிகுமார் ஹீரோயின் செண்ட்ரிக் கதை ஒன்றை நயன்தாராவிடம் சொல்லி இருக்கிறார். அவருக்கு இந்தக் கதைப் பிடித்திருந்ததால் உடனே சம்மதம் சொல்லி இருக்கிறார். இதனால், அடுத்தக் கட்ட வேலைகள் தொடங்கி இருக்கிறது.
இயக்குநராக சினிமா துறைக்குள் வந்து, நடிகராக வலம் வருபவர் சசிகுமார். சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கடன் காரணமாக தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருபவர் விரைவில் படங்கள் இயக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்புகிறேன் என சசிகுமார் தெரிவித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இயக்கப்போவது நயன்தாராவின் கதைதானா அல்லது வேறு பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கப் போகிறாரா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025