ஜேர்மனி அணியில் களமிறங்கும் ஹரி கேன்
11 ஆவணி 2023 வெள்ளி 10:43 | பார்வைகள் : 4344
டோட்டன்ஹாம் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஹரி கேன் இனி ஜேர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மொத்தம் 103 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
30 வயதான ஹரி கேன் கடந்த 19 ஆண்டுகளாக வடக்கு லண்டன் அணிக்காக களமிறங்கி வருகிறார்.
100 மில்லியன் பவுண்டுகளுக்கு குறைவான எந்த ஒப்பந்தமும் ஏற்க முடியாது என டோட்டன்ஹாம் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பேயர்ன் முனிச் அணிக்காக களமிறங்க இருப்பதால், மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொள்ள ஹரி கேன் ஜேர்மனிக்கு செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.