Paristamil Navigation Paristamil advert login

குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனுக்கு அபராதம் விதித்த BCCI!

குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனுக்கு அபராதம் விதித்த BCCI!

28 பங்குனி 2024 வியாழன் 04:52 | பார்வைகள் : 1602


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மான் மீது BCCI அபராதம் விதித்துள்ளது.

சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையிலான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.   

அதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

எனவே முதலில் சென்னை அணியானது துடுப்பெடுத்து ஆடியது. அதில் 206 ஓட்டங்களை குவித்தது.

இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இலக்காக 207 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் குஜராத் அணி 143 ஓட்டங்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனுக்கு BCCI அபராதம் விதித்துள்ளது.

இந்தப் போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

T20 இல் ஒரு மணிநேரம் 25 நிமிடத்திற்குள் 20 ஓவர்களும் முடிந்திருக்க வேண்டும். அதற்கு மேலாக சென்றால் ஸ்லோ ஓவர் ரேட் விதிப்படி 4 பீல்டர்கள் மட்டுமே 30 யார்டு வட்டத்திற்குள் வெளியில் நிற்பது அனுமதி அளிக்கப்படும்.

முதலில் கேப்டனுக்கு போட்டி சம்பத்திலிருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 


இதே போன்று மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். 

மேலும் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிப் பெற்றதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்