Paristamil Navigation Paristamil advert login

வேலை தேடுவோருக்கான கொடுப்பனவுகளில் திருத்தம்!!

வேலை தேடுவோருக்கான கொடுப்பனவுகளில் திருத்தம்!!

28 பங்குனி 2024 வியாழன் 05:06 | பார்வைகள் : 6175


வேலை தேடுவோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் (d'indemnisation des chômeurs) புதிய சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு பிரதமர் கேப்ரியல் அத்தால் பரிந்துரைத்துள்ளார்.

 

வேலை தேடுவோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு காலத்தை குறைப்பதே அந்த திருத்தமாகும். நேற்று மார்ச் 27 ஆம் திகதி புதன்கிழமை இதனை பிரதமர் கேப்ரியல் அத்தால் பரிந்துரைத்திருந்தார். முன்னதாக 24 மாதங்களுக்கு வழங்கப்பட்ட இந்த கொடுப்பனவினை ஜனாதிபதி மக்ரோன் 18 மாதங்களாக குறைத்திருந்தார். இந்நிலையில், அதனை மேலும் குறைத்து 12 மாதங்களாக மட்டுப்படுத்த பரிந்துரைத்துள்ளார் பிரதமர்.

 

பிரதமரின் இந்த கருத்து உடனடியாகவே விமர்சனங்களுக்கு உள்ளனது. பலர் இதனை எதிர்த்து கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். ‘அரசிடம் புதிய நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் இருக்கும் திட்டங்களை இல்லாமல் செய்வதற்குரிய திட்டங்கள் நிறைய உள்ளன’ என  எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

நேற்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு பிரதமர் கேப்ரியல் அத்தால் TF1 தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதன்போதே இதனை அவர் குறிப்பிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்