கொலம்பியாவில் முறியடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகம்
28 பங்குனி 2024 வியாழன் 05:34 | பார்வைகள் : 3981
ஏறக்குறைய நான்கு டன் போதைப்பொருள் ஏற்றப்பட்டிருந்த கொலம்பிய வேகப் படகு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகத்தை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த வேகப் படகை கொலம்பியாவின் இராணுவக் கப்பல்களும் விமானங்களும் துரத்திச் சென்று, கொலம்பியாவிற்கு அப்பால் கரீபியன் கடலில் வைத்து பிடித்துள்ளன.
இதன்போது, குறித்த படகில் இருந்து 113 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளினை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொலம்பிய கடற்படை வெளியிட்டுள்ள வான்வழி காணொளியில், சந்தேகத்திற்கிடமான படகின் பணியாளர்கள் தப்பிக்க முயல்வது மற்றும் பொதிகளை தண்ணீரில் வீசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
அத்துடன், பல மைல்கள் துரத்தலுக்குப் பிறகு, படகு இடைமறிக்கப்பட்டுள்ளதோடு வேகப் படகில் இருந்த கொலம்பியாவை சேர்ந்த மூவரும் ஹோண்டுரான் மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.