பால்டிமோர் கப்பல் விபத்தால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து... கசியும் இரசாயனம்...

28 பங்குனி 2024 வியாழன் 08:18 | பார்வைகள் : 7867
பால்டிமோர் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த கப்பலில் இருந்து அபாயகரமான ரசாயனம் கசிந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை உரிய அதிகாரிகள் தரப்பு மேற்கொண்ட ஆய்வில், விபத்தில் சிக்கிய கப்பலில் 56 கொள்கலன்களில் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 764 டன் அளவுக்கு ரசாயனப் பொருட்கள் அந்த கப்பலில் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தற்போது அந்த கொள்கலன்கள் சேதமடைந்து, அதில் இருந்து அபாயகரமான ரசாயனம் கசிந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 2 அல்லது நான்கு வாரங்களில் எத்தனை கொள்கலன்கள் சேதமடைந்துள்ளது என்ற முழு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கப்பலின் மாலுமி உட்பட முதன்மையான ஊழியர்களை விபத்து தொடர்பில் விசாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கப்பல் விபத்து நடந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் வரையில், கப்பல் ஊழியர்கள் அந்த கப்பலை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த கப்பலின் 22 ஊழியர்களும், அனைவருமே இந்தியர்கள், கப்பலில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், உடைந்த பாலத்தின் இடிபாடுகளை அகற்றும் வரையில் கப்பல் ஊழியர்களும் வெளியேற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.