பாடசாலை அதிபர் பதவி விலகினார்! - அரசு வழக்கு பதிவு செய்வதாக பிரதமர் அறிவிப்பு!
28 பங்குனி 2024 வியாழன் 09:30 | பார்வைகள் : 11291
பரிசில் உள்ள lycée Maurice Ravel பாடசாலையின் அதிபர் இரு நாட்களுக்கு முன்னர் பதவி விலகியுள்ளார். இஸ்லாமிய மாணவி ஒருவர் அணிந்திருந்த தலையை மறைக்கும் கலாச்சார உடையினை அகற்றக்கோரி தெரிவித்த நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதையடுத்தே அதிபர் பதிவி விலகியிருந்தார்.
இது தொடர்பாக, பிரதமர் கேப்ரியல் அத்தால் மார்ச் 27 நேற்று புதன்கிழமை தெரிவிக்கையில், “அவர் தனது கடமையினையே செய்துள்ளார். சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்” என தெரிவித்தார். அத்தோடு ‘அரசு இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளது’ எனவும் தெரிவித்தார்.
குறித்த அதிபருக்கு சமூகவலைத்தளமூடாக கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக பதவி விலகியிருந்தார்.


























Bons Plans
Annuaire
Scan